ஆயிரக்கணக்கான எத்தியோப்பியர்கள் சூடானில் அகதிகளாக தஞ்சம்!

download 28
download 28

ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அண்மைக்காலமாக உள்நாட்டு போரானது இடம்பெற்றுவருவதால் ஆயிரக்கணக்கானோர் அண்டை நாடான சூடானில் அகதிகளாக தஞ்சமடைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்நாட்டில் டைக்ரே மாகாணத்தில் அரசுக்கும், போராளிக்குழுவினருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது.இதனால் அங்கு தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் அந்நாட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், எல்லையில் உள்ள டெகெஷே நதியைக் கடந்து சூடானின் ஹம்தயாத் நகரில் 8, 000மேற்பட்டோர் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.