சிரியாவின் உயர்மட்ட இராஜதந்திரி காலமானார்!

Em6jVEQWEAYIKI4
Em6jVEQWEAYIKI4

சிரியாவின் உயர்மட்ட இராஜதந்திரியும் நீண்டகாலமாக வெளியுறவு அமைச்சராக இருந்தவருமான வலீத் அல்மொலேம் உயிரிழந்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

இத்தகவலை அந் நாட்டு அரச தொலைக்காட்சி இன்று திங்கட்கிழமை(16) அதிகாலை அறிவித்துள்ளது.

எனினும் அவரது உயிரிழப்புக்கான காரணங்கள் கூறப்படாத நிலையில், 79 வயதான வலீத் அல் மொலேமின் பல ஆண்டுகளாக இருதய பிரச்சினைகளினால் உடல்நலப் பாதிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மொலேம் முதன்முதலில் வெளியுறவு அமைச்சராக 2006 இல் நியமிக்கப்பட்டதுடன் துணை பிரதமர் பதவியையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.