சீனாவில் 35 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட புறா!

pigeon named New Kim.jpg new
pigeon named New Kim.jpg new

பெல்ஜியத்தில் பெண் பந்தயப் புறாவொன்று இலங்கை மதிப்பில் சுமார் 35 கோடி ரூபாவுக்கு நேற்றைய தினம் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

2 வயது மட்டுமே ஆன நியூ கிம் (New Kim ) என அழைக்கப்படும் குறித்த புறாவை சீனாவைச் சேர்ந்த நபரொருவரே ஏலத்தில் எடுத்துள்ளார்.

முன்னதாக, பிரான்சில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டு நடுத்தர பந்தயத்தில் நியூ கிம் புறா முதலிடம் பிடித்ததோடு, பெல்ஜியத்தின் சிறந்த இளம் புறா என்ற பட்டத்தையும் தட்டிச் சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.