பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நான்காவது தடவையாக பொறுப்பேற்றார் நிதிஷ் குமார்!

Nitish Kumar becomes Bihar Chief Minister for the fourth time.
Nitish Kumar becomes Bihar Chief Minister for the fourth time.

பீகாரின் முதலமைச்சராக நிதிஷ் குமார் நான்காவது முறையாக இன்று மாலை பொறுப்பேற்றுள்ளார்.

பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த இந்தப் பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர் பாகு சவுகானினால் அவருக்கு பதவிப் பிரமாணமும் இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது.

அத்துடன், பா.ஜ.க. சார்பில் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள தக்ரிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோரும் பதவியேற்றுள்ளனர்.

அத்துடன், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க., இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா மற்றும் விகாசீல் இன்சாம் கட்சியைச் சேர்ந்த எட்டுப் பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.

இந்தப் பதவியேற்பு நிகழ்வில், உட்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.