பாதுகாப்பான மருந்தினை உருவாக்கியுளோம் – மொடேர்னா மருந்து நிறுவனம்

moderna lab 300x169 1
moderna lab 300x169 1

அமெரிக்காவின் மொடேர்னா மருந்து உற்பத்தி நிறுவனம் தான் உருவாக்கியுயள்ள கொரோனா வைரஸ் மருந்து 95 வீதம் பாதுகாப்பளிக்ககூடியது என தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 30,000 பேரை அடிப்படையாகவைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இது தெரியவந்துள்ளது என மொடேர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சோதனைகள் 94.5 வீதம் பாதுகாப்பை அளிக்கின்றது என்பது உறுதியாகியுள்ளது என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது மிகச்சிறந்த நாள் என தெரிவித்துள்ள மொடேர்னா அடுத்த சில வாரங்களில் மருந்தினை பயன்படுத்துவதற்கான அனுமதியை கோரி விண்ணப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள நோயாளியின் வயது காரணமாக தங்கள் மருந்து தனது வலுவை இழக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது என மொடேர்னா நிறுவன அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட மருந்து கொரோனா வைரஸ் நோயாளர்களின் நிலை மோசமடைவதை தடுக்குமா? அவர்கள் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்குமா? என்பது தெரியவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட மருந்தினை சோதனை செய்தவேளை குறிப்பிடத்தக்க பாதுகாப்பு பரிசோதனைகள் எழுவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருந்துகள் சிறப்பாக செயற்பட ஆரம்பிக்கும் போது தென்படும் அறிகுறிகள் மாத்திரம் தென்பட்டன என பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்