கொரோனா தொற்றாளர்கள் குணமடையும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலை

1595510689 corona outbreak 2
1595510689 corona outbreak 2

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (16) ஒரேநாளில் 28 ஆயிரத்து 555 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 88 இலட்சத்து 74 ஆயிரத்து 172 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 82 இலட்சத்து 88 ஆயிரத்து 169 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 4 இலட்சத்து 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொற்றாளர்கள் அதிகமாக குணமடையும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. மேலும் நேற்று ஒரேநாளில் 450 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 30 ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது