ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார் இஸ்ரேலிய பிரதமர்!

104585014 11dba3f5 6884 4dc6 9774 48125af87993
104585014 11dba3f5 6884 4dc6 9774 48125af87993

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தினை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டிசம்பர் மாதம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளன.

அபுதாபி மகுட இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்த விஜயத்தனை பெஞ்சமின் நெதன்யாகு மேற்கொள்ளவுள்ளார்.

இஸ்ரேல் – ஐக்கிய அரபு எமிரேட்ஸிக்கிடையிலான உறவுகளை சீராக்குவதற்கு அமெரிக்க ஏற்பாடு செய்த தரகு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இஸ்ரேலிய பிரதமர் மேற்கொள்ளும் முதல் விஜயமாக இது அமைந்துள்ளது.