அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டால் சரியான பதிலடி கொடுக்கப்படும்- ஈரான்

534083
534083

அமெரிக்கா தாக்குதலை மேற்கொணடால் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான்மீது தாக்குதலை மேற்கொள்வது குறித்து டொனால்ட் டிரம்ப் ஆராய்ந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானிற்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் மிகக்கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அரசாங்கத்தின் பேச்சாளர் அலிரேபியேய் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் ஈரானின் அணுஉலைகள் மீது தாக்குதலை குறித்து ஆராய்ந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். ஈரானின் அணுஉலைகளை தாக்க முடியுமா என கேள்வி எழுப்பி ஆராய்ந்த டொனால்ட் டிரம்ப் பின்னர் அந்த யோசனையை கைவிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி மைக்பென்ஸ் இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ புதிய பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டொபர் மில்லர் ஆகியோருடன் டிரம்ப் இது குறித்து ஆராய்ந்துள்ளார். ஈரானின் அணுஉலை மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு டிரம்ப் திட்டமிட்டது குறித்து நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் அணுஉலை மீதான தாக்குதல் பரந்துபட்டமோதலிற்கு வழிவகுக்கும் என தெரிவித்து சிரேஸ்ட அதிகாரிகள் டிரம்பின் யோசனையை நிராகரித்துள்ளனர்.

அவர் தாக்குதலுக்கான சாத்தியப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினார் அவர்கள் என்ன நடைபெறலாம் என்பதை விவரித்தனர் அதன் தாக்குதலை மேற்கொள்வதில்லை என டிரம்ப் தீர்மானித்தார் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.