பயிற்சியின் போது நடந்த விபத்தில் உயிரிழந்த சாகசக்காரர்!

115541551 064386449
115541551 064386449

ஜெட் பேக்குகள் மற்றும் கார்பன் பைபர் ஜெட்சூட்டை பயன்படுத்தி வான்வழியில் பறக்கும் போட்டிகளில் பிரபலமான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சாகசக்காரர் வின்சென்ட் ரெபெட் டுபாயில் பயிற்சியின் போது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் டுபாயில் ஜெட்மேன் நிறுவனம் தயாரித்த கார்பன் பைபர் ஜெட்சூட்டை முதன் முறையாக அணிந்துகொண்டு சுமார் 6,000 அடி உயரத்திற்கு பறந்துள்ளார்.

வின்சென்ட் ரெபெட் ஜெட்மேன் டுபாய் நிறுவனத்தின் ஒரு அங்கத்தவராக இருந்துள்ளார்.

36 வயதான இவர் வளைகுடா நீர்முனை நகரம் மற்றும் ஆல்ப்ஸ் மலை வழியாக விமானங்களினால் பிரபலமடைந்துள்ளார்.

டுபாயில் ஜெட்மேன் நிறுவனம் அறிக்ககையில், டுபாயில் பயிற்சியின்போது ரெபெட் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் மேலதிக விபரங்களை வழங்கவில்லை.

மரணம் குறித்த விசாரணை இப்போது நடந்து வருகிறது.

“வின்ஸ் ஒரு திறமையான விளையாட்டு வீரர், எங்கள் அணியின் மிகவும் விரும்பப்பட்ட மற்றும் மதிப்பிற்குரிய உறுப்பினர்”

“எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடைய குடும்பத்தினருடனும், அவருடன் அறிந்த மற்றும் பணியாற்றிய அனைவருக்கும் உள்ளன.”

என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வின்சென்ட் ரெபெட் அவரது வாழ்க்கை முழுவதும் ஏராளமான சாகசங்களை நிகழ்த்தியுள்ளார்.