2ஆம் கட்ட மலபார் போர் பயிற்சி வடக்கு அரபிக்கடல் பகுதியில் ஆரம்பம்!

202011180225084434 Tamil News Tamil News Phase II of Malabar 2020 in the Northern Arabian SECVPF
202011180225084434 Tamil News Tamil News Phase II of Malabar 2020 in the Northern Arabian SECVPF

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் 2ஆம் கட்ட மலபார் போர் பயிற்சி வடக்கு அரபிக்கடல் பகுதியில் நேற்று ஆரம்பமானது.

இந்த போர் பயிற்சி எதிர்வரும் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

முதல்கட்ட மலபார் கூட்டுப்பயிற்சி வங்கக்கடல் பகுதியில் கடந்த 3ஆம் திகதி முதல் 4 நாட்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இதன் 2ஆம் கட்ட பயிற்சி வடக்கு அரபிக்கடல் பகுதியில் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது

இதில் இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘விக்ரமாதித்யா’, அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘நிமிட்ஸ்’ ஆகியவற்றை மையப்படுத்தி ஏனைய நாடுகளின் போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.

கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை தாக்குவது தொடர்பான அதிநவீன பயிற்சிகளும் இதில் இடம்பெறுகின்றன.

இந்திய போர்க்கப்பல்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்கள் ஆகியவை மேற்கு மண்டல கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் தலைமையில் பங்கேற்கும் என இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.