கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் 4வது இடத்தில்!

625.0.560.350.160.300.053.800.668.160.90 2
625.0.560.350.160.300.053.800.668.160.90 2

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் இந்தியாவும் மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கடந்த சில நாட்களாக பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் 4வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 14 ஆயிரத்து 524 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 இலட்சத்து 36 ஆயிரத்து 755 ஆக உயர்வடைந்துள்ளது.

அந்நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 625 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்து 273 ஆக பதிவாகியுள்ளது.

மேற்கு ஐரோப்பிய அண்டை நாடுகளை முந்திக்கொண்டு ஐரோப்பாவில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு ஊரடங்கு சட்டம் டிசம்பர் மாதம் வரை கடந்தவாரம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.