அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

corona 696x394 1
corona 696x394 1

அமெரிக்காவில் கொரோனா நோயால் மரணித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 29ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் 11.5 மில்லியன் பேர் கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உலகில் ஏனைய எந்த நாட்டையும் விட, அதிகூடிய தொற்றுப் பரவலையும் மரண எண்ணிக்கையையும் அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன் தற்போது மீண்டும் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் நோய்ப்பரவல் தீவிரமடைந்துள்ளது.

நாளாந்தம் பெரும் எண்ணிக்கையிலான நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.