இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 4 பேர் பலி

cracker factory 344 26 1482737201
cracker factory 344 26 1482737201

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மேற்கு வங்காளம் மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு, 4 பேர் படுகயமடைந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மால்டா மாவட்டத்தில் சுஜாப்பூர் பகுதியிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.

காவல்துறையினர் மற்றம் தீயணைப்பு வீரர்கள் இணைந்து வெடிவிபத்தில் ஏற்பட்ட தீயினை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

குறித்த வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் இடம் பெற்றுவருகிறது.