மத்திய அமெரிக்காவை தாக்கிய அயோட்டா புயல்;30 க்கும் மேற்பட்டோர் பலி!

puyal2
puyal2

மத்திய அமெரிக்க நாடுகளில் அடுத்தடுத்த புயல் தாக்குதல்களால் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘ஈடா’ என்ற புயல் மத்திய அமெரிக்க நாடுகளை கடுமையாக தாக்கியது.

அந்த பாதிப்பிலிருந்து இன்னும் பல கிராமங்கள் வெளிவராத நிலையில், தற்போது நிகரகுவா பகுதியை அயோட்டா புயல் கடுமையாக தாக்கி உள்ளது. இதன் காரணமாக 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள்.

மீட்புப் பணியாளர்கள் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

வடக்கு கொலம்பியாவிலிருந்து தெற்கு மெக்ஸிக்கோ வரையிலான ஏராளமான கிராமங்களில் அதிகளவான மழை வீழ்ச்சி மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

ஹொண்டுராஸின் முக்கிய நகரமான சான் பெட்ரோ சூலா போன்ற நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நகரத்தின் விமான நிலையம் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

நிக்ரகுவாவைத் தாக்கிய மிக வலுவான அயோட்டா புயல் திங்கட்கிழமை தாமதமாக கடற்கரையைத் தாக்கியது.

நிக்ரகுவாவில் சுமார் 160,000 பேரும், ஹொண்டுராஸில் 70,000 பேரும் தங்குமிடங்களை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

ஹொண்டுராஸின் போனாமி குடியேற்ற அமைப்பின் தலைவர் கரேன் வல்லடரேஸ், புயல்களிலிருந்து ஏற்பட்ட பேரழிவு அடுத்த சில மாதங்களில் அமெரிக்காவிற்குள் இடம்பெயர்வதை துரிதப்படுத்தும் என்று எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.