இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 90 இலட்சத்தை நெருங்கியது!

Corona Virus 22
Corona Virus 22

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து­­­ வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 90 இலட்சத்தை நெருங்கியது 83.83 இலட்சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்த எண்ணிக்கை 89 இலட்சத்து 58 ஆயிரத்து 483 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 83 இலட்சத்து 83 ஆயிரத்து 602 பேர் குணமடைந்துள்ளனர், 4 இலட்சத்து 43 ஆயிரத்து 303 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,31, 578 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.