அமெரிக்க வரலாற்றிலேயே பொறுப்பற்ற ஜனாதிபதி டிரம்ப்- ஜோ பைடன்

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பொறுப்பற்ற ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் என புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளிற்கு எதிரான டிரம்பின் குற்றச்சாட்டுகள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளை டிரம்ப் ஏற்க மறுப்பது அதிகார மாற்றத்தை தடுக்குமா என்பது குறித்து நான் கரிசனை கொண்டிருக்கவில்லை ஆனால் ஒரு நாடாக நாங்கள் யார் என்பது குறித்த தவறான செய்தியை இது தெரிவிக்கும் என பைடன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் தற்போதைய செயற்பாடுகள் காரணமாக அவர் அமெரிக்கா வரலாற்றில் மிகவும் பொறுப்பற்ற ஜனாதிபதி என பதிவாகப்போகின்றார் என பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்கள் நம்பமுடியாத பொறுப்பற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளனர்,எங்கள் ஜனநாயகம் எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்த நம்பமுடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செய்திகள் உலக நாடுகளிற்கு சென்றுகொண்டிருக்கின்றன என பைடன் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் நிர்வாகம் பல முக்கிய அமைப்புகளுடன் தாங்கள் தொடர்புகொள்வதற்கு அனுமதி மறுப்பதால் கொரோனா வைரசினை எதிர்கொள்வதற்கான திட்டங்களை தீட்டும் முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன என பைடன் தெரிவித்துள்ளார்.