இன்று கரையை கடக்கின்றது நிவர் புயல்: தமிழ்நாட்டில் அச்சநிலை

1 12
1 12

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது புயலாக மாறி இன்று, நாளை காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கக் கூடும். இந்த புயலுக்கு ‘நிவர் புயல்’ என பெயரிடப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, சென்னை என தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலில் சீற்றம் ஏற்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புயல் மற்றும் கனமழையை சமாளிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.