6 கோடியை கடந்தது உலகளாவிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!

20200513 COVID 19 graphic
20200513 COVID 19 graphic

ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் அடிப்படையில், உலகளாவிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளது.

தற்போது புதிய நோய்த்தொற்றுகளின் வேகம் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கபட்டுள்ள அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவ சேவையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன்காரணமாக உடனடியாக நன்றி தெரிவித்தல் நாள் விடுமுறைக்கு வீட்டிலேயே இருக்குமாறு அங்குள்ள அதிகாரிகள் அமெரிக்கர்களை வலியுறுத்தினர்.

அமெரிக்கா ஒரு வாரத்திற்குள் 10 இலட்சம் புதிய கொரோனா நோயாளர்களை பதிவு செய்துள்ளது, இந்நிலையில், அங்கு 1கோடியே 27 இலட்சத்திக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 260,000 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இதுவரை 60,037,735 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,421,352 பேர் உயிரிழந்துள்ளதாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்,

அமெரிக்கா – பாதிப்பு- 12,777,754, உயிரிழப்பு 2,62,266

இந்தியா – பாதிப்பு – 92,66,705, உயிரிழப்பு 1,35,223

பிரேசில் – பாதிப்பு – 61,66,606, உயிரிழப்பு 1,70,769

பிரான்ஸ் – பாதிப்பு – 22,21,874, உயிரிழப்பு 50,700

ரஷ்யா – பாதிப்பு – 21,44,229, உயிரிழப்பு 37,173

ஸ்பெயின் – பாதிப்பு 16,05,066 உயிரிழப்பு 44,037

இங்கிலாந்து – பாதிப்பு 15,60,872 உயிரிழப்பு 56,630