அபுதாபியில் 144 தளங்கள் கொண்ட 4 கட்டிடங்கள் வெடிவைத்து தகர்ப்பு!

Mina Plaza towers 768x528 1
Mina Plaza towers 768x528 1

அபுதாபியில்  மினா சையது துறைமுகப்பகுதியை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளை ஐக்கிய அரபு அமீரக அரசு மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற மினா பிளாசா டவர்ஸை தகர்க்கும் முடிவு எடுக்கப்பட்டது.

இதனையடுத்து, 6 ஆயிரம் கிலோ வெடிபொருட்கள் கொண்டு 144 தளங்கள் கொண்ட 4 கட்டடங்கள் நேற்றைய தினம்  வெற்றிகரமாக தகர்க்கப்பட்டன.

சுமார் 165 மீற்றர் உயரம் கொண்ட குறித்த பிரமாண்டக்  கட்டிடங்கள்  பத்தே நொடிகளில் இடிந்து தரைமட்டமாகும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.