அவுஸ்திரேலியாவின் சிட்னி உட்பட பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு !

temperatures
temperatures

அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகருமான சிட்னி உட்பட அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் கடும் வெப்பநிலை பதிவாகியதை அடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சிட்னியில் வெப்பநிலை நேற்று 40 டிகிரி செல்சியஸை தாண்டியது என்றும் அதே நேரத்தில் மேற்கு நியூ சவுத் வேல்ஸ், தெற்கு அவுஸ்ரேலியா மற்றும் வடக்கு விக்டோரியா ஆகிய இடங்கள் சராசரியாக 45 டிகிரி வெப்பநிலை பதிவாகியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளுக்கு ஐந்து அல்லது ஆறு நாள் வெப்ப அலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக 40 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படக்கூடிய அச்சம் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 12 மில்லியன் ஹெக்டேர்கள் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் 33 பேர் உயிரிழந்ததுடன் 1 பில்லியன் விலங்குகள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.