வங்கக் கடலில் உருவாகிவரும் புயல்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கு எச்சரிக்கை !

puyal tsunami earth news
puyal tsunami earth news

வங்கக் கடலில் உருவாகிவரும் புயலால் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திராவிலும் கனமழை பெய்யுமென தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து, ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளா, கர்நாடக, கோவா மற்றும் இலட்சதீவுகள் கடற்பரப்பு வரை புயலின் பாதிப்பு இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வங்கக் கடலில் புயல் உருவாகி வருவதைக் குறிக்கும் வகையில், தமிழகத்தில் பல்வேறு துறைமுகங்களில் முதலாம் இலக்க புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதன்படி, பாம்பன், தூத்துக்குடி, நாகை, கடலூர், எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் இந்த எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.