பிரித்தானிய கூலிப்படையின் இலங்கை போர்குற்றம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

115638398 mediaitem115638397

பிரித்தானியாவின் தனியார் பாதுகாப்பு நிறுவனமான கீனி மீனி சேவை நிறுவனம் 1980ம் ஆண்டு கூலிப்படையாக வந்து இலங்கையில் புரிந்த போர் குற்ற குற்றச்சாட்டு தொடர்பில் பிரித்தானிய மெட்ரோபோலிரன் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கீனி மீனி சேவையின் படைகள் 1980ம் ஆண்டு தமிழ் இயக்கங்களுக்கு எதிராக போரிட இலங்கையில் காவற்துறை விசேட அதிரடிப்படைக்கு இராணுவ பயிற்சியளித்தது.

அக்காலப்பகுதியில் அதிரடிப்படையினர் தமிழர்கள் பலரை படுகொலை செய்தனர்.

இந்நிலையிலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கூலிப்படைகள் அல்லது தனியார் இராணுவ படைகளுக்கு எதிராக விசாரணைகளை பிரித்தானியா முன்னெடுப்பது இதுவே முதல் முறையாகும்.

கீனி மீனி கூலிப்படைகளின் இலங்கை தொடர்பான ஈடுபாட்டை பற்றிய ஆதாரங்கள் பிரித்தானிய அரச ஆவணங்கள் மற்றும் ஊடகவியலாளர் பிலிப் மில்லர் சமர்ப்பித்த கோரிக்கை ஆவணங்களில் இருந்தும் பெறப்பட்டுள்ளது.

கீனி மீனி என்ற பெயரில் போர் குற்றங்களுடன் தப்பித்த பிரித்தானிய கூலிப்படைகள் தொடர்பான நூலை ஊடகவியாளர் மில்லர் ஜனவரியில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.