பிளாஸ்டிக் முட்டை ஆம்லெட் !!

18 jiu
18 jiu

தமிழகத்தில் மறுபடியும் பிளாஸ்டிக் முட்டை பயம் தலைதூக்கி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம், வத்த லக்குண்டு பகுதியைச் சேர்ந்த ஒருவர், கடையில் வாங்கிய முட்டைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று ஆம்லெட் போட்டபோது முட்டைகளின் வெள்ளைக் கரு பிளாஸ்டிக் போல் காணப்பட் டதை அடுத்து பொதுமக்களி டையே பிளாஸ்டிக் முட்டை விற் பனைக்கு வந்திருக்கிறதோ என்ற ஐயம் கிளம்பி இருக்கிறது. 

நிலக்கடலை வியாபாரியான காசிமாயன் என்பவர், வத்தலக் குண்டு வட்டாரத்தில் உள்ள ஒரு கடையில் முட்டைகளை வாங்கிக்கொ ண்டு வீட்டுக்குச் சென்று மனைவியிடம் கொடுத்து ஆம்லெட் போடச் சொன்னார். ஆம்லெட் போட்டபோது ஒரு முட்டையின் வெள்ளைக்கரு பிளாஸ்டிக் போல் காணப்பட்டது.

மற்றொரு முட்டையிலும் அதே போன்று இருந்ததால் அதிர்ச்சி அடைந்த காசிமாயன், உடனே அவற்றை எடுத்துக்கொண்டு கடைக்காரரிடம் ஓடினார். கடைக்காரர் அவற்றை வாங்கிக்கொண்டு மொத்த விற்பனை நிலையத்துக்கு விளக்கம் கேட்பதற்காகப் போனார்.

 மேல் விவரங்கள் தெரியவில்லை . தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன் பிளாஸ்டிக் முட்டைகள் பல இடங்களிலும் விற்கப்படுவதாகத் தகவல் பரவியது.

 ஆனால் அந்தத் தகவல் வதந்தி என்பது பின்னர் தெரியவந்தது. வத்தலக்குண்டு பகுதியில் இப் போது அதேபோன்று முட்டை பயம் தலைதூக்கி இருக்கிறது. இதனால் அச்சம் அடைந்துள்ள அந்தப் பகுதி மக்கள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒட்டு மொத்தமாகக் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.