இன்றைய நாள் எப்படி (18.01.2020)

astrology
astrology

மேஷம்

குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நன்மை நடக்கும் நாள்.

ரிஷபம்

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அமோகமான நாள்.

மிதுனம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கடகம்

எதிர்ப்புக்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். வெளிவட்டாரத்தில் நல்ல தொடர்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகளால் இலாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் பணிகளை முடிக்க போராட வேண்டியிருக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

சிம்மம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். துணிச்சலுடன் உங்கள் காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை தீட்டி இலாபம் பெறுகுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

கன்னி

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது சரக்குகள் மூலம் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் ஆதரவும் கிடைக்கும். நிம்மதி கிட்டும் நாள்.

துலாம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விடயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் சில நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். திட்டமிட்டு செயல்படுவதால் வெற்றிபெறும் நாள்.

விருச்சிகம்

கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் சுமாராக இலாபம் இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

தனுசு

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு மதிப்பு அளிப்பார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

மகரம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அந்நிய மதத்தவர் அறிமுகமாவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.

கும்பம்

புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு முழுமையககிட்டும். மாற்றங்கள் ஏற்படும் நாள்.

மீனம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். முன்கோபத்தை குறையுங்கள். உங்களிடம் உள்ள பலம் பலவீனம் அறிந்து செயல்படுங்கள். வியாபாரத்தில் இலாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் மீதான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.