குழந்தைகளை கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும்?

2 vv 1
2 vv 1

கொரோனா வைரஸ் எளிதில் பரவக்கூடியதாக இருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட நோயெதிர்க்கும் திறனை பொறுத்தது. நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் எளிதில் இந்த வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நோயெதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்கள் என்று வரும்போது அதில் முதலிடத்தில் இருப்பவர்கள் குழந்தைகள்தான். இந்த பதிவில் குழந்தைகளை கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து எப்படி பாதுகாக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க நல்ல சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். கண்கள், வாய், மூக்கு போன்றவற்றை உங்களின் சுத்தம் செய்யப்படாத கைகளுடன் தொடக்கூடாது. இதனை குழந்தைகள் செய்வதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன், சாப்பிடும் முன், விளையாடிய பிறகு என அனைத்து செயல்களுக்குப் பிறகும் கை கழுவு செய்யுங்கள்.

கை குலுக்குவதன் மூலம்தான் கொரோனா வைரஸ் பெருமளவில் பரவுகிறது. எனவே எந்த காரணத்திற்காகவும் கை குலுக்க வேண்டாமென்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குழந்தைகள் கை குலுக்குவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு இதனை அடிக்கடி சொல்லிக்கொடுப்பது அவசியமாகும்.

ஒரு மதத்திற்குத் குழந்தைகளுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமிக்கவும். குழந்தைகளுக்குத் தேவையான டயப்பர்கள், அடிப்படை மருந்துகள், பெரியவர்களுக்குத் தேவையான மருந்துகள், இன்ஹேலர்கள் போன்றவற்றை வாங்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். நீண்டகாலம் கெடாமல் இருக்கக்கூடிய உணவுப்பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.

எந்த சூழ்நிலையாக இருந்தாலும் குழந்தைகளின் ஷூக்கள் வீட்டு வாசலில்தான் இருக்க வேண்டும், குறிப்பாக இந்த காலகட்டங்களில். ஏனெனில் இவை பாக்டீரியாக்களை வெளியில் இருந்து உங்கள் வீட்டிற்குள் அழைத்து வரும். தரையை தொடக்கூடிய எந்தவொரு பொருளையும் வீட்டு வாசலில்தான் வைக்க வேண்டும்.

குழந்தைகளின் உடைகள் கிருமிகளை குறைவாகத்தான் பரப்பும் என்றாலும் குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பி வந்தவுடன் அவர்களின் உடைகளை மாற்ற வைப்பது நல்லது. எப்பொழுதும் குழந்தைகளை சுத்தமான உடைகளை அணிய ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகள் வந்தவுடன் எவ்வளவு விரைவில் உடைகளை மாற்றிக்கொள்கிறார்களோ அவர்களுக்கு அவ்வளவு நல்லது.

நோய்கள் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கையின் படி கொரோனா வைரஸானது பாதிக்கப்பட்டவர்களின் பேச்சு, தும்மல், இருமல் போன்றவற்றின் மூலம் பரவும் என்று கூறப்பட்டுள்ளது. அதிக மக்கள் கூட்டம் இருக்குமிடங்களில் இது வேகமாகவும், எளிதாகவும் பரவும். எனவே பெற்றோர்கள் குழந்தைகள் அதிக மக்கள் நடமாட்டம் இருக்குமிடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்ப்பது நல்லது.

உங்கள் வீட்டில் அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் இடங்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். குளிர்சாதனப்பெட்டி, மாடி கைப்பிடி, போன், பொம்மைகள் போன்ற இடங்களை அவ்வப்போது சுத்தம் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அனைத்து வழிகளிலும் அதிகரிக்க முயல வேண்டும். போதிய உடற்பயிற்சிகள், விளையாட்டு குறிப்பாக உணவு போன்றவற்றில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இதுபோன்ற ஆபத்தான காலக்கட்டங்களில் உடல்நிலையை பாதிக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.