அழுகையை கட்டுப்படுத்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் இவைதானாம்!

Tamil News large 1561985
Tamil News large 1561985

உணர்ச்சியை வெளிகாட்ட பலரும் கண்ணீர் விட்டு அழுவார்கள். அதே போல அதை கட்டுப்படுத்தி கொண்டு பலரும் கண்ணீர் விடமாட்டார்கள்.

பொங்கி வரும் அழுகையை கட்டுப்படுத்துவது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

அவ்வாறு செய்வதால் உடலில் நிகழும் பிரச்சினைகள் குறித்து காண்போம்.

மன அழுத்தம்
அழுகையை கட்டுப்படுத்துவது உங்கள் மூளைக்கு மன அழுத்தத்தை பதிவு செய்கிறது. கார்டிசோல் ஹார்மோனை வெளியிட்டு அந்த சோகத்தை அதிகரிக்கச் செய்கிறது.

இதய துடிப்பு
கண்ணீரைக் கட்டுப்படுத்துவதால் இதயத்தோடு தொடர்புடைய அனுதாபத்தை உண்டாக்கும் நரம்புகள் வேகமாக துடிக்கின்றன. எனவே இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. படபடப்பு அதிகரிக்கிறது.

மூச்சு விடுதலில் மாற்றம்
இதயத்தில் படபடப்பு தோன்றினாலே மூச்சு விடுவதும் அதிகரிக்கும். முழுமையாக மூச்சு விடமுடியாமல் பாதி பாதியாக மூச்சு விடுவார்கள். அழுத்தமாக உணரும்போது மூக்கு மற்றும் நுரையீரல் மூச்சிக்குழாய் இறுக்கமாக மாறுவதே இதற்குக் காரணம் என்கின்றனர்.

உடல் தசைகள்
ஹார்மோன்களின் வேகமாக சுரப்பு இரத்தத்தை அதிவேகமாக அனைத்து தசைகளுக்கும் செலுத்தும். இதனால் உங்கள் கண் முன் நிகழ்வது தெரிந்தாலும் அதற்கு செயல்பட மூளை , உடல் வேலை செய்யாது. உதாரணத்திற்கு கார் முன்னே வருவது தெரிந்தாலும் விலகிச் செல்ல உடல் மூளைக்குக் கட்டளையிடாது, இது போல பல விளைவுகள் ஏற்படும்