வியர்வை நாற்றத்தை போக்க இவற்றை செய்யுங்கள்!

Topical Odor Fighters 1024x683 1
Topical Odor Fighters 1024x683 1

சிலருக்கு வியர்வை நாற்றம் அடித்தால் அவர்கள் நண்பர்களுடன் கூட அவர்களிடம் நெருங்கி பழக மாட்டார்கள். இதனால் பெரிதும் சங்கடத்துக்கு ஆளாக நேரிடுகிறது.

இப்படிபட்ட சங்கடத்தை போக்க சில வழிகள் இருக்கின்றன. அவற்றை கடைப்பிடித்தாலே போதும்.

தினசரி குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தை பிழிந்து, அதனுடன் கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்த்து குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.

காலை, மாலை இரு வேளைகளிலும் குளித்து வர வேண்டும்.தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில், தினம் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும்.

கொஞ்சம் வேப்பிலையைக் கசக்கிச் சேர்த்து, தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்து வரலாம்.

குளித்து முடித்ததும், ஈரத்தை நன்கு துடைத்துவிட்டு, ஆன்ட்டி பாக்டீரியல் டஸ்ட்டிங் பவுடர் பயன்படுத்த வேண்டும்.

உடைகளை வைக்கும் அலமாரிகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த உடையை, பின்னர் துவைத்துக் கொள்ளலாம் என்று மற்ற துணிகளோடு சேர்த்து வைக்கக் கூடாது.

உணவுப்பழக்கம்கூட ஒருவரின் உடல் நாற்றத்துக்குக் காரணமாகலாம்.

காலங்காலமாக உடலில் தேங்கிய அந்த நாற்றத்தைப் போக்க, பச்சைக் காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும்.

வெட்டிவேரை குளிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.