26 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்த பிரபல நடிகை!

fm puradsi 17
fm puradsi 17

பல படங்களில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், பார்த்திபன், சத்யராஜ், ராம ராஜன் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, நடனம், என அசத்தியவர் நடிகை ரூபினி. தமிழ் படங்கள் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என நடித்து வந்த இவர் 1995 க்கும் பின் எந்த மொழி படங்களிலும் நடிக்கவில்லை.

தமிழில் கடைசியாக அவர் நடித்த படம் தாமரை. 26 வருடங்களாக சினிமாவை விட்டு விலகியிருந்தவர் ராதிகா நடித்து தயாரிக்கும் சித்தி 2 சீரியலில் பத்மா சண்முகப்பிரியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஒரு மைனா மைனா குருவி என்ற உழைப்பாளி படத்தில் ரஜினியுடன் டூயட் ஆடியிருப்பார். மலையாளத்தில் மோகன் லால், மம்முட்டி, தெலுங்கில் வெங்கடேஷ், பாலகிருஷ்ணா என பலருடன் நடித்திருந்தார்.