நடிகர் சோனு சூட்டுக்கு கோயில் கட்டிய மக்கள்!

sonu soot
sonu soot

பிரபல பொலிவூட் நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு காலத்தில் செய்து வரும் உதவிகளால் மக்கள் மனங்களில் தனக்கென ஓர் தனி இடத்தை பிடித்துள்ளார்.

குறிப்பாக வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் இருந்த புலம் பெயர் தொழிலாளர்களை தனது சொந்த செலவில் அவர்களது ஊருக்கு அனுப்பி வைத்தார். அறுவை சிகிச்சை மேற்கொள்ள பணம் இல்லாதவர்களுக்கு பண உதவி செய்தார். ஒன்லைனில் படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு தொலைபேசி கோபுரம் அமைத்து கொடுத்தார்.

இந்நிலையில் தெலுங்கானாவின் சித்திப்பேட் மாவட்டத்தில் உள்ள டப்பா கிராமத்தை சேர்ந்த உள்ளூர் மக்கள் சோனுவின் சமூக பணியை என்றென்றும் நினைவு கூறும் வகையில் கோயில் ஒன்றை தங்களது கிராமத்தில் கட்டியுள்ளனர்.

இக் கோயிலில் சோனுவின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது சிலையை செதுக்கிய சிற்பியை கொண்டே உள்ளூர் மக்கள் இந்த கோயிலை திறந்துள்ளனர்.

கொரோனா கால ஊரடங்கின் போது உதவி தேவைப்பட்டவர்களுக்கு இல்லை என சொல்லாமல் வாரி கொடுத்த கர்ணன் அவர். மனிதனை மனிதனாக பார்க்கும் அவரது உயர்ந்த உள்ளம் எங்களது உள்ளத்தை கவர்ந்து விட்ட காரணத்தினால் கோயில் கட்டி வழிபட்டு வருகிறோம். இவர் தான் எங்கள் கடவுள்” எனத் தெரிவித்துள்ளனர்.