ஹாலிவுட் படத்தை ஓரம் கட்டிய தனுஷ்!

Dhanush 1 d
Dhanush 1 d

உலக நாடுகளையே அச்சுறுத்தக்கூடிய நோய் என்றால் அது கொரானா நோய் தான். சமீபத்தில் பிரிட்டனில் கொரானா புதிய தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் அதைவிட தென்னாப்பிரிக்காவில் 501.வி2 என்கிற மிகக் கொடிய வகை கொரானா தொற்றை கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் தற்காலிக ஊரடங்கு பிறப்பித்து வருகின்றன. அங்கும் படப்பிடிப்புகள் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் அவெஞ்சர்ஸ் பட இயக்குனருடன் ஒரு வெப் சீரியஸில் நடிப்பதற்காக ஒப்பந்தம் உறுதியானது. இதனால் தனுஷ் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வந்தனர்.

வெளிநாடுகளில் ஊரடங்கு பிறப்பித்துள்ளதால் படப்பிடிப்பு நடத்த முடியாது என தெரியவந்துள்ளது. இதனை கேட்ட தனுஷ் தற்போது கோலிவுட் வட்டாரத்திற்கு திரும்பி உள்ளார்.

அவெஞ்சர்ஸ் பட இயக்குனருக்கு கொடுத்த கால்ஷீட்டை அப்படியே கார்த்திக் நரேனுக்கு கொடுத்துள்ளார். இதனால் இவர்களது கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் எனவும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஹாலிவுட் செல்வதாக இருந்த தனுஷுக்கு தற்போது மீண்டும் கோலிவுட் வந்து அடைந்துள்ளதால் ஒருபக்கம் கவலையாக இருந்தாலும் மற்றொரு பக்கத்தில் சந்தோசம் அடைந்ததாக தனுசுக்கு நெருங்கிய வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரண்டு படங்களையும் முடித்துவிட்டு ஹாலிவுட் படத்தில் இணையலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.