வெளியாகிய மலையாள சார்லி தமிழ் ரீமேக் ‘மாறா’ டிரைலர்!

maara
maara

ஒரு காலத்தில் லவ்வர் பாயாக நடித்துக் கொண்டிருந்த போது தமிழக ரசிகர்கள் இடையே இருந்த வரவேற்பு மாஸ் ஹீரோவாக மாறிய பிறகு மாதவனுக்கு சுத்தமாக கிடைக்கவில்லை. ரன் படம் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து அதே மாதிரி பல படங்கள் வந்ததால் தமிழ் சினிமா அவரை கண்டுகொள்ளவில்லை.

ஹிந்தியில் அவ்வப்போது 3 இடியட்ஸ் போன்ற சிறந்த படங்களில் நடித்து வந்தார். கடைசியாக மாதவன் நடிப்பில் தமிழில் வெளியான விக்ரம் வேதா, இறுதிச்சுற்று ஆகிய இரண்டு படங்களும் பெரிய வெற்றியைப் பெற்றது.

அதேபோல் சமீபத்தில் மாதவன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருந்த நிசப்தம் படம் அமேசான் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் மாதவன் படம் அமேசான் தளத்தில் வெளியாக உள்ளது ரசிகர்களை அதிர வைத்துள்ளது. தொடர்ந்து ஓடிடி ஹீரோவாக மாறி விட்டாரா எனவும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படம் சார்லி. இந்த படத்தின் தமிழ் ரீமேக்காக மாறா என்ற படம் உருவாகியுள்ளது.

இதில் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது மாறா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாறா படம் அமேசான் தளத்தில் வருகின்ற ஜனவரி 8ஆம் திகதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.