படக்குழுவே அசந்துபோகும் படி உள்ள வலிமை படத்தின் ரசிகர் செய்த போஸ்டர்!

valimai fan made poster
valimai fan made poster

பொதுவாக இப்பொழுது படங்களுக்கு ஒரு ஒர்கிங் டைட்டில் வைத்து விட்டு ஷூட்டிங் சென்று விடுகின்றனர் படக்குழு. படம் ரிலீஸ் நெருங்கும் சமயத்தில் டைட்டிலுடன் போஸ்டர் வெளியிடுவது தான் வாடிக்கை.

அந்தவகையில் இல்லாமல் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் டைட்டிலுடன் ஆரம்பிக்கப்பட்ட படம் தான் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தை குறுகிய காலத்தில் முடித்து, ரிலீஸ் செய்து அசத்தினார் வினோத். ஆனால் யார் திரிஷ்டி பட்டதோ, வலிமை படம் முடிந்த பாடில்லை. கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங்கும் இன்னமும் நடந்துகொண்டே தான் உள்ளது.

அஜித் ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தை அடக்கமுடியாமல் சமூகவலைத்தளங்களில் பட அப்டேட் என்ன என்று கேட்டுக்கொண்டே வந்தனர். தயவு செய்து அப்டேட் கேட்காதீர்கள் என்று தான் அப்டேட் வந்தது.

இந்நிலையில் புத்தாண்டு ஸ்பெஷலாக வலிமை படத்தின் ரசிகர் செய்த போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகின்றது. அதிகாரபூர்வ போஸ்டர் போல் அந்தளவுக்கு நேர்த்தியாக உள்ளது இந்த போஸ்டர். படக்குழு வெளியிடுவதற்கு முன்பு ரசிகர்களே இப்படி போஸ்டர் வெளியிட்டால், கட்டாயம் இதை விட சிறப்பான போஸ்டரை கொடுக்க வேண்டிய அழுத்தம் படக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளது, என்பதே நிஜம்.