சூர்யா 40 படத்தை இயக்க உள்ள பாண்டிராஜ்!

NTLRG 20180824134930949806
NTLRG 20180824134930949806

சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கும் சூர்யா 40 படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தின் வாயிலாக படத்தின் இயக்குனர் பாண்டிராஜிடம் புத்தாண்டை முன்னிட்டு சூர்யா 40 படத்தின் அப்டேட் விடுமாறு தொடர்ந்து அவரை நச்சரித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பாண்டிராஜ், இன்னும் சூர்யா 40 படத்திற்கான கதாபாத்திர தேர்வில் முக்கியமான இரண்டு கதாபாத்திரம் தேர்வு செய்யப்பட்டவுடன் நிச்சயம் படத்தின் அப்டேட் வெளிவரும் என குறிப்பிட்டிருந்தார்.

அதில் ஒரு கதாபாத்திரத்தில் கிராமத்துக் கதைகளுக்கு ஏற்ற நடிகராக ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை நடித்து வரும் ராஜ்கிரண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூர்யாவுடன் மிக நெருக்கமான கதாபாத்திரமாம்.