ஒரு பாடலுக்கு நடனமாட கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் பிரபல நடிகை!

1609760927 6769
1609760927 6769

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், அலா வைகுந்தபுரம்லூ படத்தின் வெற்றிக்குப் பின்னர் ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மசாலா இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியக் கதை என சொல்லப்பட்டதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கொரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு மேல் தடைபட்டது. இப்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கியமான பாடலுக்காக நடனமாட நடிகை திஷா பதானியிடம் படக்குழு கேட்டுள்ளனர். பாடலுக்கு நடனமாட சம்மதித்த அவர் அதற்கு சம்பளமாக ஒரு கோடி ரூபாய் கேட்டுள்ளாராம். இதைக் கேட்டு படக்குழு அதிர்ச்சியானாலும் எப்படியும் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றனவாம்.