பொங்கல் விருந்து : முன்னணி நாயகர்களுடன் இணையும் தனுஷ்!

download 1 3
download 1 3

விஜயின் “மாஸ்டர்” திரைப்படம் மற்றும் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு படங்களை அடுத்து பொங்கல் விருந்தாக தனுஷ் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணையும் திரைப்படத்தின் டீசர் ஒன்றும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலைப்புலி தாணு அவர்களின் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படத்தின் டீசர் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள முக்கிய ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருவதாகவும், இந்த டீசர் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் மற்றும் இணையதளங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் பெயர் இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.