மாஸ்டர் படத்துடன் வெளியாகவுள்ள முக்கிய படத்தின் டீஸர்: இரட்டை கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

master 05012021 400
master 05012021 400

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர். கடந்த வருடம் ஏப்ரல் மாதேமே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா காரணமாக வரும் ஜனவரி 13 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

மேலும் திரையரங்கில் ஐம்பது சதவீத இருக்கைகள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், நூறுசதவீத இருக்கைகள் குறித்து தமிழக முதலவரை சந்தித்து பேசினார் தளபதி விஜய்.

அதனை தொடர்ந்து தமிழத்தில் திரையரங்குகளுக்கு நூறுசதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் இடைவேளையின் போது பிரபல கன்னட யஷ் நடிப்பில் வெளியாகவுள்ள கே. ஜி. எப் 2 படத்தின் டீஸரும் வெளியாக உள்ளதாம்.இதனால் தற்போது இருதரப்பு ரசிகர்களும் செம்ம உற்சாகத்தில் உள்ளனர்.