கே ஜி எஃப் 2 படத்தை கைப்பற்றிய பிரபல நடிகர்!

large dhdghdfg 68330
large dhdghdfg 68330

யாஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியாகி இந்திய அளவில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் கே ஜி எஃப். முதலில் இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு யாருக்கும் ஏற்படவில்லை. பின்னர் எதிர்பார்க்காத அளவிற்கு மாபெரும் வெற்றி பெற்றது.

கே ஜி எஃப் படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

இப்படத்தில் வரும் வசனங்கள் மற்றும் ஆக்சன் காட்சிகள் படம் வெற்றி பெறுவதற்கு ஒரு முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு விஷால் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டது. இந்த படத்தின் மூலம் விஷால் பல மடங்கு சம்பாதித்தார்.

அடுத்ததாக கே ஜி எஃப்வின் இரண்டாம் பாகத்தை வெளியிடுவதற்கான உரிமையை யார் யார் வாங்கப் போகிறார் என்ற கேள்விகள் அடுக்கடுக்காக வெளியாகின. ஆனால் தற்போது கேரளாவில் கே ஜி எஃப் வின் இரண்டாம் பாகத்தினை வெளியிடுவதற்கான உரிமையை பிரபல நடிகரான பிரித்திவிராஜ் வாங்கியுள்ளார்.

ஆனால் கே ஜி எஃப் இரண்டாம் பாகத்தை வெளியிடுவதற்கு தமிழ்நாட்டில் யார் வாங்கப் போகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இன்னும் ஒரு சில தினங்களில் யார் வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.