ஈழத்து இயக்குநர் கேசவராஜன் காலமானார்!

director 720x450 1
director 720x450 1

ஈழத்து திரைப்பட இயக்குனரான நவரட்ணம் கேசவராஜன், இன்று (09) அதிகாலை நோய் காரணமாக காலமானார்.

பல வீதி நாடகங்கள், மேடை நாடகங்களை தயாரித்து வழங்கிய இவர் பிஞ்சுமனம், திசைகள் வெளிக்கும், கடற்புலிகளின் 10ஆண்டு நிறைவை முன்னிட்டு கடலோரகாற்று, அம்மா நலமா போன்ற படங்களை இயக்கியுள்ளதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் வலியை உணர்த்தும் அப்பா வருவார் போன்ற பல குறும்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார்.

இறுதியாக அவர் பனைமரக்காடு திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். அவரின் இறுதிக்கிரிகைகள் நாளை காலை, அன்னாரின் தற்காலிக முகவரியான 31.மதவடி ஒழுங்கை, சுதுமலை வடக்கு, மானிப்பாய் எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.