’மாஸ்டர்’ திரைப்படம் வெற்றி பெற திருவண்ணாமலை சென்ற படக்குழுவினர்!

1610257390 4998

விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் இன்னும் நான்கு நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர்

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்று தனது குழுவினருடன் திருவண்ணாமலை சென்று அருணாச்சலேஸ்வரரை வழிபாடு செய்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவருடன் அவரது படக்குழு இவ்னர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

1610257469 4248

திருவண்ணாமலை கோவிலில் சாமி கும்பிட்டு முடித்தவுடன் கோவிலின் முன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது