உங்கள் அன்பை நிரூபிக்க இது போல செய்ய வேண்டாம் – சோனுசூட்

1608291807 0635
1608291807 0635

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா கால ஊரடங்கு இந்தியா முழுவதும் அமுலில் உள்ள நிலையில் பிரபல நடிகர் சோனு சூட், எந்தவித பிரதிபலனையும் பார்க்காமல் புலம்பெயர் தொழிலாளார்களுக்கு பேருந்து, புகையிரத வசதி செய்தும், ,மாணவர்களின் படிப்புக்கு உதவியும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என தன் சொத்துகளை அடமானம் வைத்து உதவி வருகிறார்.

அவரை இந்திய மக்கள் கடவுள் போல் கோயில் கட்டி சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஒரு ரசிகர்கள் தனது கையில் நடிகர் சோனு சூட் பெயரைப் டாட்டூ குத்திக் கொண்டு அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதைப் பார்த்தை நடிகர் சோனு சூட் அதிர்ச்சி அடைந்து, இதுபோல் செய்ய வேண்டாமெனத் தனது ரசிகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.