கஜினி சூர்யாவுக்கு பதிலாக நடிக்க இருந்தது இவர் தானாம்!

ghajini
ghajini

கடந்த 2005 ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா மிரட்டலாக நடித்து வெளியான படம் கஜினி. குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப்படம் நன்கு வசூலித்தது.

சூர்யாவின் சினிமா பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது. இன்றளவு பேசப்படும் படமாகிவிட்டது. மொட்டை போட்டு, உடம்பு முழுக்க டாட்டு குத்திய சூர்யாவின் கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

ஹிந்தியில் இப்படம் நடிகர் அமீர்கானை கொண்டு எடுக்கப்பட்டு அதிலும் வெற்றி பெற்றது. ஆனால் தெலுங்கில் இப்படம் வெளியானது.

மேலும் குறித்த திரைப்படத்தில் நடிகர் பவன் கல்யாணை நடிக்க வைக்க திட்டமிட்டார்களாம். ஆனால் அவர் அச்சமயம் மொட்டை அடிப்பதற்கு முன்வரவில்லையாம்.