மறைந்த நடிகர் பெயரில் சாலை ; ரசிகர்கள் மகிழ்ச்சி

th 1 439
th 1 439

கடந்தாண்டு நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியாவை உலுக்கியது. இந்நிலையில் சுஷாந்த் சிங் பெயர் டெல்லியில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியிலுள்ள தெற்கு ஆண்ட்ரூஸ் கஞ்ச் என்ற பகுதிக்கு சுஷாந்த் சிங்புத் என்று பெயர் சூட்டப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தெற்கு டெல்லி மாநகராட்சியின் கவுன்சிலர் அபிஷேக் தத் இதை மொழிந்துள்ள நிலையில் வரும் யூன் மாதம் 14 ஆம் திகதி இந்த சாலைக்கு சுஷாந்த் பெயர் சூட்டப்படவுள்ளது.