சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

sivakarthikeyan 2
sivakarthikeyan 2

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்த நிலையில், அவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘டான்’ என பெயரிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்க உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். டான் படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.