கதாநாயகியை மையமாகக் கொண்ட படத்தில் வனிதா விஜயகுமார்

1599041519 7055
1599041519 7055

விஜய் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் வனிதா விஜயகுமார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.

சமீபத்தில் பீட்டர் பால் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் வனிதா விஜயகுமார். அவருடனும் கருத்துவேறுபாடு ஏற்படவே அவரை விட்டுப் பிரிந்தார்.

இதையடுத்து , தனது யூடியுப் சேனல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தனது ரசிகர்களிடம் உறையாடி வந்தார் வனிதா.

பின்னர், பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்பிறகு கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்பொது அவரைக் குறித்து பேசப்பட்டதற்காக கடுமையாக விமர்சித்தார்.இதையடுத்து,குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது குழந்தைகளுடம் வனிதா மாலத்தீவு சுற்றுலா சென்றிருந்தார். இதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்..

இந்நிலையில், பாம்பு சட்டை என்ற படம் இயக்கிய ஆதம் சாதன் என்பவர் நாயகியை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதில்,வனிதா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். நகைசுவை நடிகர் கருணாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.