அஜித் பட நடிகை சர்ச்சை கருத்து ; கொந்தளித்த ரசிகர்கள்

1561897613 8509
1561897613 8509

நடிகர் மாதவன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா, இவன் தந்திரன், நேர்கொண்டபார்வை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் மாறா. இப்படத்திகுர் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் நடிப்பு பெரிதும் பராட்டப்பட்டது.

இந்நிலையில், அண்மையில் திருமணப் பந்தத்தில் இனைந்த இந்தி நடிகர் வருண் தவான் – நடாஷா தலால் இருவருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார் ஷ்ரத்தா. அதில், இனிமேல் வருண் சினிமாவில் நடிக்கமாட்டார். என்றும் வாழ்கையிலும் சினிமா உலகிலும் அவர் எப்படி மனதை சமமாக வைக்கப்போகிறார் எனக் கேள்வி எழுப்பியதுடன், அவரை மிஸ் செய்யப்போவதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இதைப்பார்த்த வருண் தவானின் ரசிகர்களும் நெட்டிசன்களும் திருமணம் முடிந்தாலே கலையுலக வாழ்வு முடிந்திடுமா? எனக் கேள்வி கேட்டுவருகின்றனர்.

மேலும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட காஜல் அகல்ர்வால் சினிமாவில் நடித்துவருகிறார் என்று ஷ்ரத்தாவுக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.