டாக்டர் படத்தின் ரிலீஸ் திகதியை அறிவித்த சிவகார்த்திகேயன்!

202006241826518888 Tamil News Sivakarthikeyan teasing director SECVPF
202006241826518888 Tamil News Sivakarthikeyan teasing director SECVPF

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், டாக்டர் படத்தின் ரிலீஸ் திகதியை நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். அதன்படி வருகிற மார்ச் மாதம் 26-ஆம் திகதி டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.