மாஸ்டர் படக் கலைஞருக்கு திருமணம்; லோகேஷ் கனகராஜ் வாழ்த்து

1612461707 2957
1612461707 2957

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரூ.200க்கு மேல் வசூல் குவித்து வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்த படத்தில் எடிட்டராகப் பணிபுரிந்த ஃபிலோமின் ராஜ் என்பவரின் திருமணத்திற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘மாஸ்டர்’. கடந்த பொங்கல் தினத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் ,லோகேஷின் படங்களில் எடிட்டராகப் பணிபுரிந்து வருபவர் பிலோமின்ராஜ். இவர் ஏற்கனவே கைதி, மாநகரம், மஸ்டர், விஷ்ணுவிஷாலின் ராட்சசன் உள்ளிட்ட படங்களி; எடிட்டராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் தனது காதலி திவ்யா பிரதீபா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.