அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இளம் நடிகர் ; வைரல் புகைப்படம்

EuW2HCcVcAI V21
EuW2HCcVcAI V21

நடிகர் ஹரிஸ் கல்யாண் தனது அம்மாவுக்கு பிறந்தநாளை முன்னிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார்.

இயக்குனர் இளன் இயக்கிய பியார் பிரேமா என்ற படத்தில் காதாநாயகனாக நடித்தவர் ஹரீஸ் கல்யாண். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ரைசா.

இதற்கு முன் பிக்பொஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் அறிமுகமான ஹரீஸ் கல்யாணுக்கு இப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது.

இந்நிலையில் ஹரிஸ் கல்யாண் மீண்டும் ரைசாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் இளன் இயக்கவுள்ளார்.

இந்நிலையில், இளைஞர்களின் மனம்கவர்ந்த நடிகர் ஹரிஸ் கல்யாண் தனது அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவரது அம்மா ஹரிசுக்கு பாசத்தில் கன்னத்தில் முத்தம் வைக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.