லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த தகவல்

1591698831 6136
1591698831 6136

ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குனர் லிங்குசாமி அதன்பின் ரன், சண்டக்கோழி, பையா உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கினார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அவர் எந்த படத்தையும் இயக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் ஒரு தெலுங்கு படத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தெனி காதநாயகானாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை வரும் தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதன்முதலாக தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் லிங்குசாமியின் படம் தெலுங்கு திரையுலகில் நல்ல வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்