ராயர் பரம்பரை படத்தில் நடிக்கும் கிருஷ்ணா!

202102172005379036 Tamil News Tamil cinema Krishna acted Rayar parambarai SECVPF
202102172005379036 Tamil News Tamil cinema Krishna acted Rayar parambarai SECVPF

சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மெளனகுரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கும் படம் “ராயர் பரம்பரை”. கழுகு கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டான மரடோனா, டூ ஸ்டேட்ஸ் படங்களின் கதாநாயகி சரண்யா நாயர் தமிழுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மேலும், தெலுங்கு பட நாயகி மும்பை அனுசுலா மற்றும் மும்பை மாடல் கிருத்திகா என்ற இரு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். மேலும், கே.ஆர்.விஜயா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா ஆர்.என்.ஆர்.மனோகர், கஸ்தூரி, பவர் ஸ்டார், கலக்கப்போவது யாரு தங்கதுரை, மிப்பு, கல்லூரி வினோத், சரண்யா, லொல்லு சபா சேஷு, ஷாலு ஷம்மு மற்றும் பலர் நடிக்க செண்டிமென்ட் கலந்த மிகப்பெரிய காமெடி படமாக பொள்ளாச்சியில் தயாராக உள்ளது.